எம்.சி.சி. திட்டத்தை மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 ஜனவரி முதலாம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.
அதனடிப்படையில், எம்.சி.சி.தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கீழ் வரும் இணையத்தளங்களின் ஊடாக தற்போது பொதுமக்கள் பார்வையிட முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி எம்.சி.சி திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் குழுவின் தலைவராகவும், போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் பட்டயக் கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
குழுவின் இறுதி அறிக்கை 2020 ஜூன் 25ஆம் திகதி பேராசிரியர் லலிதசிறி குணருவனினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை மக்கள் அறிந்துகொள்வதற்காக பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்நிலையிலேயே இவ்வாறு இணையத்தளங்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
www.president.gov.lk
https://www.president.gov.lk/si/ ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட எம்.சி.சி மீளாய்வு அறிக்கை
https://www.president.gov.lk/wp-content/uploads/2020/06/ இறுதி அறிக்கை.
www.presidentsoffice.lk
https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/06/25/mcc-review-final-report-presented-to-president-2/?lang=si
www.pmdnews.lk
http://www.pmdnews.lk/si/mcc-review-final-report-presented-to-president/
0 Comments