தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் கருணா பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கினார் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
கருணா விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார். இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
கருணா வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
எனவே தற்போது இவர் தெரிவித்துள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.
இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம் என மேலும் அவர் தெரிவித்தார்.
0 Comments