அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் சரணடைந்து விட்டாரென அவரை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 22.97 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.21 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதற்காக கொரோனா பரவலுக்கு மத்தியிலும் குடியரசு கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவர் வெள்ளைக் கொடியை அசைத்து பின்வாங்குகிறார் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டள்ளமை பரவலாக பேசப்படுகிறது.
0 Comments