Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஹட்டன் வர்த்தக நிலையத்தில் கொள்ளை: பாதுகாப்பு கமராவில் சிக்கிய திருடன்









ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 04 இலட்சம் ருபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் காலை வேளையில் வர்த்தக நிலையத்திற்கு வந்த போதே சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வர்த்த நிலையத்தினை உடைத்து பணம் கொள்ளையிடும் காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி. கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments