Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்



கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தம்பானை ஆதிவாசிகள் கிராமம் இன்று மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதாக கூறியுள்ள ஆதிவாசிகளின் தலைவர் வன்னிலா ஹெத்தன், சுகாதார துறையினர் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி, ஆதிவாசிகளின் கிராமத்தில் உள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை வந்து பார்வையிடலாம் எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், மஹியங்கனை தம்பானை ஆதிவாசிகள் கிராம் மற்றும் அருங்காட்சியகம் என்பவற்றை கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படுவதாக அறிவித்தார்.

ஆதிவாசிகளின் தலைவர் வன்னிலா ஹெத்தன் தலைமையில், சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி இன்று காலை ஆதிவாசிகளின் கிராம் மற்றும் அருங்காட்சியகம் என்ப திறக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments