ஸ்ரீலங்கா கடற்படைக்கு கிடைக்க இருந்த நிதி தனியார் நிறுவனமொன்றினால் கொள்ளையிடப்பட்டது ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மிக பயங்கரமான தேசிய மோசடி என ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகியிருந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற மிகப் பயங்கரமான தேசிய மோசடியானது இலங்கை கடற்படைக்கு கிடைக்கப் பெறவிருந்த நிதி தனியார் நிறுவனமொன்றினால் கொள்ளையிடப்பட்டதாகும்.
அது தொடர்பில் பல வழக்குகள் தொடப்பட்டுள்ளன. அவற்றை கண்காணிப்பதோடு நாம் இதில் நேரடியாக பங்குபற்றுவோம்.
சட்ட விரோதமாக துப்பாக்கிகள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முழு நாடும் ஒரு பாதாளகுழுவுக்கு அடிபணிய வேண்டிய சூழல் ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டது என்பது கவலைக்குரியதானாலும் அதனை கூறிக் கொள்ள விரும்புகின்றோம். 2012 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.
அவற்றை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவும் தயாராகவுள்ளோம். இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்து அரசியல் போராட்டமொன்றை தொடர நாம் தயாராகவுள்ளோம் என்றார்.
0 Comments