வத்தளை - திக்கோவிட கடற் பரப்பில் நீரில் மூழ்கி 3 பெண்களும் ஆண் ஒருவருமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதில் நால்வர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் கவலைக்கிடமான முறையில் றாகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 16 வயதுடைய சிறுமி மற்றும் 14 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த மற்றைய இரு பெண்கள் 20 மற்றும் 30 வயதுடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சடலங்கள் றாகமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வத்தளை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
0 Comments