Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஜேர்மனியில் மிகப்பாரிய இறைச்சி தொழிற்சாலையில் தொற்றியது கொரோனா



ஜேர்மனியின் மிகப்பெரிய இறைச்சித் தொழிற்சாலையில் பணிபுரியும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தொழில்துறையில் துணை ஒப்பந்தக்காரர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. துணை ஒப்பந்தக்காரர்கள் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்களைக் கொண்டு பணிகளைச் செய்வதால் அவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கின்றனர்.

இதனால் புதிய கிளஸ்டர்கள் உருவாகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா (Rhine-Westphalia) மாநிலத்தில் அமைந்துள்ள டோனிஸ் குழுமத் தொழிற்சாலையில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Post a Comment

0 Comments