கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கிகரிக்கப்பட்ட முதலாவது மருந்து ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்தை கொள்வனவு செய்வதற்கு 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியில் 75 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 4 இலட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்தல் அல்லது தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரசித்திபெற்ற விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments