Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் நெருங்கும் போது கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும்! நெருக்கடிக்குள் சிக்கப்போகும் அரசு?



எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நெருங்கும் போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவது தொடர்பான தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அபேவர்தன, இந்த தகவலை கூறியுள்ளதுடன் அந்த நிலைமையை எதிர்கொள்வது அரசாங்கத்திற்கு சிரமமானதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வஜிர அபேவர்தன, ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்துவதில் அவர் குறிப்பிட்ட பங்கை செய்தவர் என அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments