தற்போது கொவிட் 19 வைரஸ் இந்நாட்டு சமூகத்திலிருந்து முற்றாக அகற்றக்கூடியதாக உள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பில் இதுவரை ஒரு லட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு ஆயத்தமாதல் மற்றும் பிரதிபலிப்பு நடவடிக்கைகளின் கீழ் தேசிய சுகாதார தொகுதியில் நோய் பரிசோதனை அளவை அதிகரிக்கும் நோக்கில் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கமையவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் வேண்டுகோளின்படி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அதி தொழில்நுட்ப மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், உபகரணங்களுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments