Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடுகளை அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்ட டிலீபா பீரிஸ்



குற்றப் புலனாய்வு பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளானது விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் செயற்பாடுகள் போன்றதென பிரதிசொலிசிட்டர் ஜெனரல் டிலீபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான ஜமாத் அமைப்பின் அரசியல்ஆலோசகராக செயற்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடுகளை அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளுடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அரசியல்ஆலோசகராக செயற்பட்டவர்.

சட்டத்தரணியான ஒருவர் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான சத்தியபிரமாணத்தை எடுத்தவர். அரசிலமைப்பிற்கு கட்டுப்படுவதாக உறுதிமொழி எடுத்தவர். ஆனால் இவர் தீவிரவாதத்தை ஊக்குவித்துள்ளார்.

எமது ஆரம்ப கட்ட விசாரணையின் போதே இது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

சந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாக தொடர்பற்றவராகயிருக்கலாம். ஆனால் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும் சதி முயற்சியே என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments