போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெட்டவலப்பிட்டிய சம்பத் எனும் நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேமுல்ல சஞ்சீவவின் சகாவான இவர் போதைப்பொருள் விற்பனையாளர் என்றும் ,பொலிஸாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்றபோது சுடப்பட்டாரென்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
பாதாள உலக குழுவைச் சேர்ந்த கெடவல்பிட்டிய சம்பத் என அழைக்கப்படும் நபர் கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது உடன் குறிப்பிட்ட நபரிடம் இருந்த 48 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸார் கைப்பற்றினர்.
0 Comments