Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஆசனத்திற்காய் முஸ்லிம்களிடையே இனவாதம் தூண்டப்படுகின்றது: ஐக்கிய மக்கள் சக்தி கவலை



தான் எவ்வாறேனும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காக அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத, பிரதேசவாத கருத்துக்களை ஊட்டும் செயற்பாடுகள் குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலைப்பை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் எம்.எஸ். அப்துல் வாஷித்தை ஆதரித்து பொத்துவில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பசூர்க்கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கிய போது கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களின் அரசியல்வாதிகளின் சுயநல தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒற்றுமையாக வாழ்ந்த முஸ்லிம் பிரதேசங்களைப் பிரித்து பிரதேச வாதங்களை உருவாக்கினர்.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட பின் முதல் நடவடிக்கையாக அரசியல் நோக்கங்களுக்காக பிரிந்த முஸ்லிம் ஊர்களை ஒற்றுமைப்படுத்தினார். அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு பிரதேசவாதங்களை மறந்தனர்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தான் எவ்வாறேனும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காக ஒற்றுமையாக வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரதேசவாதக் கருத்துக்கள் பேசப்படுவது குறித்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

இன்று முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இனவாதிகளினால் திட்டமிடப்பட்டு செயற்படுத்துப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கமாக பொத்துவில் பிரதேசத்தில் மண் மலைப் பிரச்சினை காணப்படுகின்றது. எமது சமுகத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கட்சி நலன் பாராது நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதற்கு இனவாதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயற்பாட்டிற்கு நமது சமுகத்தின் சார்பில் சிலரும் துணை போகும் நிலைமை தொடர்கின்றது.

பொத்துவில் பிரதேச மக்களுக்கென தனியான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் பொத்துவில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறுவதற்கு இம்மண்ணிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ். அப்துல் வாசித் அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக பொத்துவில் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து உங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும். உங்களின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச மக்கள் வாக்களிக்க கடமைப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரசின் வாக்குப் பலத்தினால் பொத்துவில் பிரதேசத்திற்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இறைவனின் உதவியால் கிடைக்க உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பொத்துவில் சமுகம் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பதன் மூலம் நமக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டுமெனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments