Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பிடித்துள்ள இந்தியா



ஐக்கிய நாடுகள் சபையின் வலிமை மிகுந்த பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினர் நாடுகளுக்குள் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

நேற்று நடந்த தேர்தலில் இந்தியா 193 வாக்குகளில் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் சக்திவாய்ந்த பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரித்தானியா,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் 10 நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

05 இடங்களுக்கு நடந்த தேர்தலில் இந்தியாவுடன் சேர்ந்து, அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் வென்றன.

இந்தியாவுக்கு நிரந்தரமில்லாத உறுப்பினர் பதவி கிடைக்க 184 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.

இதன்படி 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகளுக்கு இந்தியா இந்தப் பதவியில் இருக்கும்.

இந்த வெற்றி குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றுள்ளதால் உலகத்தை வாசுதேவ குடும்பம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கொண்டுவர முயற்சிக்கும்.

ஐ.நா.வில் இந்தியாவின் பயணம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. ஐ.நாவின் அடிப்படை உறுப்பினராக இந்தியா இருக்கிறது.

ஐ.நா.வின் இலக்குகளை அடைவதற்கும், செயல்படுத்துவதற்கும், திட்டங்களை செயல்படுத்தவும் இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments