Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்



ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மும்பையிலிருந்து வந்த கப்பல் பணியாளர்கள் 29 பேர், மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த 11 பேர் ஆகியோரே இன்று அடையாளம் காணப்பட்டவர்களாவர், என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (23) இரவு 8.00 மணியளவில் 29 பேரும் 10.00 மணியளவில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,951 இலிருந்து 1,980 ஆகவும் பின்னர் 1,980 இலிருந்து 1,991 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,526 இலிருந்து 1,548 ஆக இன்று அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments