Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தாய் கொலை! சோகத்தில் குடும்பம்









மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இக்கொலைச் சம்பவம் இன்று காலை வேளையில் அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென உயிரிழந்த பெண்ணின் தாயாரான தேவநேசராசா சாந்தநிதி தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த பெண்ணின் கணவர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments