Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டார் வட கொரியாவின் சக்தி வாய்ந்த பெண்!



தென் கொரியாவிற்கு எதிராக ராணுவ ரீதியான நடவடிக்கையை எடுக்க போகிறேன் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் சக்தி வாய்ந்த பெண்ணும், கிம் ஜோங் உன்னிங் தங்கையுமான கிம் யோ ஜோங் தென் கொரியாவை கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

“தென் கொரியாவிற்கு எதிராக வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறது. நாங்கள் ராணுவ ரீதியான நடவடிக்கையை எடுக்க போகிறோம். தென் கொரியாவுடன் மொத்தமாக உறவை துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.

வடகொரியாவின் ராணுவத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் என்னிடம் இருக்கிறது. என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு நான் வடகொரியா ராணுவத்திற்கு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறேன்.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை நான் வடகொரியாவிற்கு அனுப்பி உள்ளேன்.

எப்படி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன்.

தென் கொரியா எங்களின் எச்சரிக்கையை மதிக்கவில்லை. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments