கேரளா கஞ்சாவுடன் 59 வயதுடைய பெண்ணொருவர் கைது நேற்று மாலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பெண்மணியை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
பிறைந்துறைச்சேனையை பூர்வீகமாகக் கொண்ட இவர் புணானை – ஜெயந்தியாயப் பகுதியில் வசித்து வருபவர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த பெண் 42 கிராம் கேரளா கஞ்சாவுடன் பஸ் வண்டியில் பயணிக்கும் போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments