Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பல்கலைக்கழகம் கிடைக்காவிட்டால் பாகிஸ்தானில் உயர்கல்வி



உயர்தர கல்வியை முடித்து விட்டு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சார் காதர் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முகமட் ஷாட் கட்டாக் இந்தப் புலமைப்பரிசில் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளித்தார்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர தகவல் பரிமாற்றத்தின் ஊடாக இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையில் காணப்படும் தீவிரவாதத்தடுப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுவாக்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்புலமைப் பரிசில் ஊடாக இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் பொறியியல் விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments