தற்போதைய சூழலில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அவர்..
பொதுமக்கள் அவசிய தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்துக்கொள்ளுங்கள்.
ஊரடங்கு முறைமை தளர்த்தப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் முற்றாக அகலவில்லை.
இந்த நிலையில் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி நின்று சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் அதிகமான அளவில் வருகை தருகின்றனர்.
இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது அனைவருக்கும் விரைவாக பரவும் சூழல் ஏற்படும்.
அத்துடன் அதிகளவான பார்வையாளர்கள் வருகைதரும் போது, வைத்தியசாலையின் காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் முரன்பாடுகள் ஏற்படும் சம்பவங்களும் உருவாகின்றது.
எனவே நிலமையை கருத்தில் கொண்டு அவசியத்தேவையை தவிர ஏனையோர் வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்த்துக்கொள்வதுடன், வருகைதருவோர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments