Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடந்த போராட்டம் தொடர்பில் மஹிந்த வெளியிட்ட செய்தி



அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தொழில் ரீதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் எமக்கு தெளிவில்லை. இதனை நாங்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளோம். ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் தொழில் ரீதியான ஆர்ப்பாட்டகாரர்கள்.

பொலிஸாரை எப்படி ஆத்திரமூட்ட முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவை பொலிஸார் வாசித்து காட்டிய பின்னரும், அப்படியான எதனையும் தமக்கு காட்டவில்லை எனக் கூறுகின்றனர்.

இதனால் பொலிஸார் இப்படியான தந்திரங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

பொலிஸாருடன் வீதியில் கட்டி புரளும் காட்சிகளே அவர்களுக்கு தேவை. அப்போதுதான் அவர்களின் செயற்பாடுகள் உறுதியாகும்.

ஏற்பட்ட சிறிய சம்பவத்தை தவிர அடக்குமுறை என காட்டுவதற்கு இவர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை ஒரு விதமாகவும் தொண்டமானின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களை ஒரு விதமாகவும் கவனித்ததாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆறுமுகன் தொண்டமான் என்பவர் மலையக தமிழ் மக்களின் தலைவர். அப்படியானவரின் மரணம் காரணமாக துக்கத்தில் இருந்த மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்த நாங்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினோம்.

மக்கள் அதனை பின்பற்றினர். நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக, இலங்கைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது முற்றிலும் வேறான விடயம்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தினமும் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புகளை நிரந்தரமாக்குமாறு கோரியே பலர் வந்தனர்.

அவர்கள் எம்மை திட்டவில்லை. கடந்த அரசாங்கத்தையே விமர்சித்தனர். தமக்கு பொய்யான நியமனங்களை வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரை ஹம்பாந்தோட்டைக்கு வர வேண்டாம் என இளைஞர்கள் கூறினார்கள்.

அவர்கள் கூறியது போல் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் தற்போது ஹம்பாந்தோட்டையில் இருந்து தப்பிவந்து தற்போது கொழும்பில் போட்டியிடுகிறார் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments