Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவின் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கவலை



ஸ்ரீலங்காவில் காணப்படும் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் முஸ்லிம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுவது குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

“பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிலும் இந்தியாவிலும் முஸ்லிம் சமூகத்தினரை கொரோனாவுடன் தொடர்புபடுத்தும் குரோத பேச்சுக்கள் களங்கப்படுத்தல்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments