Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

உலகில் மிகக் கொடூரமான நாடான அமெரிக்காவுடன் ஒருபோதும் கைச்சாத்திடமாட்டோம்! ராஜபக்ஷக்களின் முக்கியஸ்தர் சூளுரை



உலகில் மிகக் கொடூரமான நாடான அமெரிக்காவுடன் எம். சி. சி ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஸ்ரீலங்காவின் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் முரணானது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க தேசிய பாதுகாப்பு தரப்பினருக்கு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு - இராஜகிரியவில் உள்ள தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினரான உதய கம்மன்பில கலந்துகொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் சர்ச்சைக்குரிய எம்.சி.சி ஒப்பந்தத்தில் பொதுத் தேர்தலின் பின் கைச்சாத்திடப்போவதாக எதிர்தரப்பினரால் தெரிவித்துவரும் கருத்துக்கள் குறித்து அவர் இதன்போது பதிலளித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுத்தேர்தல் முடிந்தவுடன் அரசாங்கம் அமெரிக்காவுடன் எம். சி. சி.ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதாக எதிர் தரப்பினர் குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பிரசாரம் செய்கிறார்கள். இந்த ஒப்பந்தம் இலங்கையின் இறையாண்மைக்கு முரணானது என்பதை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெளிவாக எடுத்துக்காட்டினோம். இதன் பிரகாரம் நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை இரகசியமான முறையில் கைச்சாத்திட்டு கொள்ளும் தேவை குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கு இருந்தது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் இரகசியமான முறையில் கைச்சாத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அதற்கு அப்போதைய எதிர்க்கட்சியாக செயற்பட்ட பொதுஜன முன்னணி இடமளிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரது விமர்சனங்களுக்குள்ளான எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் லலித் ஸ்ரீ குணவர்தன தலைமையில் பல்கலைக்கழக வேந்தர்கள் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்தார்.

குழுவின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எம்.சி.சி. ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் முரணானது என்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தரப்பினருக்கு எடுத்துரைத்துள்ளார். குழுவின் அறிக்கையின் முதல் பகுதியே முரண்பட்டதாக அமையும் போது முழுமையான உள்ளடக்கம் எவ்வாறு அமையும் என்பதை யூகித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments