கருணா தெரிவித்துள்ள கருத்தின் மூலம் நாட்டின் சட்டவாக்கத்துறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தான் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றேன் என வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தெரிவித்து அவர்களின் வாக்குகளை பெற்றுகொள்ள கருணா முயற்சிப்பதை எண்ணி கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவரின் கருத்தை கண்டிப்பதாகவும் அத்தனகல்ல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஸ, கருணா போன்றோருக்கு தான் முன்னர் பிரதநிதித்துவப்படுத்திய கட்சியின் பிரதித் தலைவர் பதவியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு சந்தர்ப்பவாதியாக செயற்பட்டு மக்களை ஏமாற்றி அரசியலை முன்னெடுப்பதன் பலன் என்ன என கேள்வி எழுப்பிய அவர், இனிமேலும் புத்தியுள்ள மக்களை ஏமாற்ற முடியாது எனவும் கூறினார்.
0 Comments