Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

யானையின் தும்பிக்கையில் தாமரை மொட்டு மலரும்: கிண்டல் செய்துள்ள சமீர பெரேரா



யானையின் தும்பிக்கையில் தாமரை மொட்டை ஏந்தியிருக்கும் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியென தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஹட்டனில் இடம்பெற்ற தேசிய மக்கள் சபையின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் சில முக்கியஸ்தர்கள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் பொதுஜன முன்னணியை தாங்கிப்பிடிக்கும் வகையிலேயே சில முக்கியஸ்தர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இதேவேளை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

ஒன்பது வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியை காட்டிக்கொடுத்ததாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் உள்ள பிரபலமான சில வீரர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடக்கும் ஊழல், மோசடிகளை எதிர்ப்பதாலும் ஹோமாகமை பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதன் காரணமாகவுமே மகிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments