Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கருணாமீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பயப்படும் ராஜபக்ஷ அரசாங்கம்!



கருணா அம்மானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பெலியத்தை சிட்னாமலுவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரசாரக்கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராகவும் கிழக்கு மாகாணத்தின் கட்டளை அதிகாரியாகவும் இருந்த கருணா அம்மான் பிற்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த கட்சியின் தலைவராக இருந்த போது கருணாவை இரண்டு முறை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தார்.

இந்த நிலையில், அண்மையில் தான் செய்த கொலைகள் குறித்து ஒப்புக்கொண்டதுடன் இராணுவத்தினரை கொலை செய்ததாக கூறிய கருணாவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் பயப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அரசாங்கம் வாக்குமூலம் வழங்க வருமாறு அழைத்துள்ளது.

அப்படி அழைத்திருந்த நேரத்திலும் கருணா சண்டித்தமான கதையை கூறியிருந்தார். குற்றவியல் விசாரணை திணைக்களம் அவருக்கு அடிபணியவில்லை என்பதால், வாக்குமூலம் வழங்கியிருப்பதாக கேள்விப்பட்டோம். இராணுவம் எதற்காக கடமையாற்றியது. எமது மக்களை பாதுகாக்க இராணுவம் கடமையாற்றியது.

போர் நடந்த போது இராணுவத்தினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. இராணுவம் மனித உரிமைகளை மீறியதாக மனித உரிமை அமைப்புகள் சர்வதேச ரீதியில் குற்றம் சுமத்தியுள்ளன. இராணுவத்தின் மீது குற்றம் சுமத்திய அமைப்புகள் ஏன் கருணாமீது குற்றம் சுமத்தவில்லை.

அனைவரும் அமைதியாக உள்ளனர். நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments