உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு தான் பொறுப்பாளி அல்லவென முன்னாள் ஜனாதிபதி ஜமத்திரிபால சிறிசேன மீளவும் தெரிவித்துள்ளார்.
பி பி சி யின் சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு யார் பொறுப்பாளிகள் என்பது தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடைபெறவுள்ளதாக தனக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments