Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் சிறுமியை இழுத்துச் சென்றவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!



திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவக்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மகேஸ் குணதிலக்க எனும் சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

தனது உறவினருடன் நேற்றைய தினம் திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியை ஓரிடத்தில் நிக்குமாறு கூறிவிட்டு தண்ணீர் போத்தலை வாங்கச் சென்றுள்ளார் அவரது உறவினர்.

மீண்டும் வந்து பார்த்த போது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதட்டமடைந்த சிறுமியின் உறவினர்கள் கடமையில் நின்ற பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

ஸ்தலத்திற்கு வருகை தந்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சிறுமியுடன் கதைத்துக்கொண்டிருந்த ஒருவர் சிறுமியை இழுத்துச்செல்லும் காட்சி அங்குள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியிருந்தது.

பின்பு சில மணி நேரங்களின் பின்னர் திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் அறிவித்ததை அடுத்து திருகோணமலை தலைமை பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளார்.

தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளாரென தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments