வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளாகத்திற்குள் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் முப்படையினரும் பாதணிகளை கழற்றாது ஆலயத்திற்குள் பிரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இவர்களின் இந்த செயற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொன்மையையும் மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றனர் என கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன், அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.
0 Comments