Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

டொனால்ட் ட்ரம்புக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!



அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்புக் கோர வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்பதுடன், ஈரானுக்கு உரிய நஷ்டஈடு வழங்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அதிக அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஈரானுடன் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன.

இருப்பினும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை இந்த 6 வல்லரசு நாடுகளும் திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை ட்ரம்ப் விதித்தார். அதன் காரணமாக இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

எனினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் ஹசன் ருஹானி கூறுகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக அமெரிக்கா ஈரானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு அமெரிக்காவின் நடவடிக்கையால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தள்ளார்.

Post a Comment

0 Comments