Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஹரினுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த செந்தில் தொண்டமான்



அரசியலுக்காக மதத் தலைவர்களை விமர்சிப்பதை வன்மையாக கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் சுயலாபத்திற்காக கிறிஸ்தவ தலைவர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ விமர்சிப்பதை நிறுத்தவேண்டும் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள கிறிஸ்தவ மக்களின் அடையாளகமாக கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இருக்கிறார். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்ல ஏனைய சமூக மக்களும் அவர் மீது அதிக மதிப்பு வைத்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தமைக்காக கர்தினாலை காரணம் சொல்வது இயலாமையை மறைப்பதற்கு கூறும் நொண்டிச்சாக்காவே இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்திருந்தால் மக்கள் ஆதரித்திருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்யாமல், ஒவ்வொருவரைக் குறைகூறுவது கண்டிக்கத்தக்கது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலியில் பாப்பரசரின் வழிகாட்டலுடன் இலங்கை மக்களுக்கு பணியாற்றி வருகிறார். அவர் பதியேற்றது முதல் இன்று வரை அவர் மீது எவரும் குற்றஞ்சாட்டாத அளவுக்கு கண்ணியமாக நடந்துகொள்கிறார். அவர் மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை.

ஈஸ்டர் தாக்குதல் என்பது அரசின் புலனாய்வுப் பிரிவின் தோல்வியாலும், வெளிநாடுகள் எச்சரித்திருந்த போதிலும், அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் நடந்த ஒன்றாகும்.

இதில் சுமார் 250இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளன. கிஸ்தவ தேவாலயங்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்காக கர்தினால் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்காக அரசியல் ரீதியாக அவர் மீது குற்றஞ்சுமத்துவது கண்டிக்கத்தது.'' என்று செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கர்தினால் கிறிஸ்தவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும். அனைத்து வறிய மக்களுக்கும் கர்தினால் உதவிகளைச் செய்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

வருங்காலங்களில் அரசியலுக்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை கர்தினால் மீது எவராவது குற்றம் சுமத்தினால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments