Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் ஆணைக்குழு மீது குற்றசாட்டை முன்வைத்த மஹிந்தவாதி



தேர்தல்கள் ஆணைக்குழு எதிர் கட்சிக்கு ஏற்ற வகையில் தேர்தல் சட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றது போதே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு முற்றுமுழுதாக எதிர் கட்சிக்கு சார்பாக செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

Post a Comment

0 Comments