Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கேரளாவில் உருவானது கொரோனாதேவி ஆலயம்



உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 424,000 பேர் உயிரிழந்து விட்டனர்.

எனினும் கொரோனாவின் பலியெடுப்பும் தொற்றும் குறைந்தபாடாக காணப்படவில்லை.

இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.

இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தை சிலையாக நிறுவி அதற்கு பூசையும் செய்து வருகிறார். தெர்மோகோல் மூலம் தயாரிக்கப்பட்டு பல்லிவல் மீது அமர்ந்திருக்கும் கொரோனா தேவி எந்த மூலமந்திரமும் இல்லாத தெய்வம் ஆகும்.

இந்த ஆலயம் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பெயர்களில் பூசைகள் நடைபெறும். பிரசாதம் விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். பூசைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன் என்று அவர் கூறி உள்ளார்.

Post a Comment

0 Comments