2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தற்போது பூதாகரமாக மாறியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களாகிய மஹெல ஜயவர்தன, குமார்சங்கக்கார ஆகியோர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் லசித் மாலிங்கவும் தனது கண்டனத்தை காணொளி ஒன்றின் மூலம்வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பில் உண்மையை கண்டறிய நீண்ட நாள் செல்லாது.
இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவருக்கு யார் இந்த குற்றத்தை செய்தது என்பதும் தெரிந்திருக்கும். ஆகவே யார் இந்த குற்றத்தை செய்தது என்பதை மக்கள் முன் அவரே கூற வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments