Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அடிப்படைவாதிகளின் சங்கமமே பொதுஜன பெரமுன: ஹர்ஷண குற்றச்சாட்டு.



அனைத்து அடிப்படைவாதிகளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பிலேயே உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கருத்தடை பற்றி பெரிதாக பேசினார்கள் அதற்கு தற்போது என்ன நடந்தது? கருத்தடை மாத்திரை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டவர்களுக்கு தற்போது குழந்தை கிடைக்கிறது. தற்போது ஷாபியும் இல்லை கருத்தடை மாத்திரைகளும் இல்லை .

ராஜபக்‌ஷ தரப்பிலேயே அனைத்து அடிப்படைவாதிகளும் உள்ளனர். எந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும் அது தவறாகும். அது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளாக இருக்கலாம்.

ஹிஸ்புல்லாஹ் போன்ற முஸ்லிம் அடிப்படைவாதிகளும் அந்த பக்கத்திலேயே இருக்கின்றனர். கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்ற தமிழ் அடிப்படைவாதிகளும் அந்த பக்கத்திலேயே இருக்கின்றனர்.

அனைத்து அடிப்படைவாதிகளும் ஒரே மேடையில் இருக்கின்றார்கள் என அவர் கூறினார்.

Post a Comment

0 Comments