Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை! உமாசந்திர பிரகாஸ்



வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள் தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் உமாசந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என உமாச்சந்திரா பிரகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உமாசந்திரா பிரகாசிடம் வடக்கு கிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கும் போதே உமாசந்திரா பிரகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவிட்டது வடக்கு கிழக்கில் விதவைகள் 87 ஆயிரமாக இருக்குமா என்பது ஒரு கேள்வி.

அதில் எந்தனை பேர் இறந்துள்ளார்கள், எத்தனை பேர் தொடர்ந்து தங்களுடைய குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.

தற்போது 10 வருடம் கடந்துவிட்டதற்குப் பிறகு எத்தனை பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது.

ஏன் என்று சொன்னால் உங்களுக்கு தெரியும் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பிறகு எங்களுடைய மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரசினைகளாக புற்று நோய், சிறுநீரக நோய் மற்றும் இருதய வருத்தம் போன்ற நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக முள்ளந்தண்டு தொடர்பான பிரசினைகளால் அவதிப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சென்ற ஒரு கிராமத்திலே 22 வயது இளைஞன் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கின்றார்.

யுத்தம் நிறைவடையும் போது அவருக்கு 12 வயது, இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் நீங்கள் சொல்லுகின்ற கணக்கெடுப்புகளில் உள்வாங்கப்பட்டுள்ளதா.

இன்னுமொரு விடயம் இந்த 10 வருடத்தில் மக்கள் ஆணை பெற்றவர்கள் தான் அதற்கான சரியான தரவுகளை கொடுக்க வேண்டும்.

எனவே 87 ஆயிரம் பேர் என்று நாங்கள் இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா.

அப்படியென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி இவ்வளவு காலமும் அந்த 87 ஆயிரம் பேருக்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தார்கள் என்ற கேள்வி இருக்கின்றது.

இரண்டாவது விடையம் நான் பார்த்த அளவிலே யுத்தம் நிறைவடைந்ததுக்கு பிறகு அந்த மக்கள் வாழ்கையிலே விரக்தியுற்றவர்களாக, வாழவேண்டும் என்ற ஒரு பிடிப்பு இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.

எனவே அவர்களுக்கு முதலில் உளவியல் சார்ந்த ஒரு ஆலேசனைகளை அல்லது வழிகாட்டல்களை வாழ வேண்டும் என்ற விருப்பத்தை நாங்கள் கொடுக்க வேண்டும்.

இரண்டாவதாக இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கை, கால்கள் ஊனமானவர்களுக்கு அல்லது அவயங்களை இழந்தவர்களுக்கு சர்வதேச ரீதியிலே நாங்கள் அவர்களுக்கான செயற்கை கை, கால் வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு வாழ வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இன்னும் பலருக்கு இருக்கக் கூடிய பிரசினை சொந்த காணி இல்லாமல் வீட்டு திட்டங்களை பெற முடியாமல் இருக்கின்றார்கள்.

எனவே உங்களுக்கு தெரியும் சாதாரணமாக குழந்தைகளோடு வாழ்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலிலே, வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழுகின்ற இடங்களிலேயே குழந்தைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் தேவையான ஒரு தீர்வு அவர்களுக்கான ஒரு பாதுகாப்பான இருப்பிடமே. அது தற்போதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார்களா இல்லையா என்பது கூட தெரியாது.

ஆனால் என்னை பொறுத்த வரையில் என்னுடைய அரசியல் பயணத்திற்கு அப்பால் அதற்கான ஒரு தேடலுக்கு ஒரு முடிவை கொடுக்கவேண்டும் என்ற ஒரு திண்ணம் இருக்கின்றது.

அது தொடர்பாக சஜித் பிரேமதாச தகுந்த ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றார். ஏன் என்றால் உங்களுக்கு தெரியும் அவருடைய தந்தையார் தொடர்ச்சியாக ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தவர் எனவே அவர் விட்டுச் சென்ற பணியை சஜித் பிரேமதாசவும் தொடர்ந்தும் முன்னெடுத்தார்.

எனவே ஆட்சியில் இருக்கின்றோமோ இல்லையோ என்பதற்கு அப்பால் தொடர்ச்சியாக இந்த மக்களுக்கு பிரச்சினைகளுக்கான தீர்வை கொடுப்போம் என்று நம்பிக்கை இருக்கின்றது.

எனவே 87 ஆயிரம் என்பதை தயவு செய்து மீளவும் நீங்கள் சரிபார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments