Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சிறிதரனுக்கு பாடம் புகட்டவுள்ள தமிழ் பெண்கள்: சந்தர்ப்பவாத அரசியலுக்கான பரிசாம்!



இம்முறை தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு விடுதலைப் போராட்டத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் தமிழ் பெண்கள் அனைவரும் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழரசு கட்சியின் மகளிர் அணிச்செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் தெரிவித்துள்ளார் .

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறதரன் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் அரசியலுக்குள் நுழைந்தபோது தமிழ் பெண்கள் அனைவரும் அவரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவமாகவே மனத்தில் வைத்து பார்த்தார்கள்.

ஆனால் இன்று அவரின் நிலை தலைகீழாக மாறியதையிட்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சிறிதரன் தற்போது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மேற்கொண்டு வரும் ஒப்பீட்டு அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அவரின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தகமையற்றவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் தகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு இல்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் விதமாக செயற்பட ஆரம்பித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத்மாத்தமாக நேசிக்கும் தமிழ் பெண்கள் அனைவரும் நிச்சியம் சரியான பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments