Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தேர்தலில் கொழும்பு பேராயரின் பக்கசார்பு தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை



கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பக்கசார்பாக நடந்துகொண்டார் என குற்றம் சுமத்திய முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது கட்சிக்குள் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கொழும்பு பேராயரின் பக்கசார்பு குறித்து குற்றம் சுமத்தியதால் ஏற்பட்ட விமர்சனங்கள் குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.

அவரது பதிவில் நயவஞ்சகன் - தன்னை காப்பாற்றிக்கொண்டு பேசி, நற்பெயரை காத்துக்கொள்வான். ஆனால் நேர்மையானவன் - உண்மையை பேசி அனைத்தையும் இழந்து விடுவான். இதனடிப்படையில் நயவஞ்சகன் யார் என்ற பிரச்சினை தற்போது இல்லையென அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த விமர்சனம் தேர்தல் களத்தில் பாதிப்பானது என்ற போதிலும் அவர் கூறிய விடயங்களில் உண்மையில்லை என எவரும் வாதிட முடியாது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாக பேராயர் காட்டிய ஆர்வத்தை தற்போது காட்டுவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments