ஆயுத போராட்டத்தையும் தியாகிகளின் மரணத்தையும் விற்றுப் பிழைப்பவன் நான் அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் பெறுவதற்காக ஆயுதப் போராட்டத்தை பயன்படுத்துவது அந்த போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயல் எனவும் தனக்கு ஆயுத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை எனவும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments