Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

நீண்ட காலத்திற்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியிட்ட மைத்திரி!



யார் என்ன கூறினாலும் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களே இருப்பதாகவும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக தான் முன்னெடுத்த போராட்டத்தை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“யார் என்ன கூறினாலும் என்னை யார் விமர்சித்தாலும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் போதைப் பொருள் கடத்தல்காரர்களும், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர்களுமே இருக்கின்றனர் என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன்.

போதைப் பொருளை ஒழிக்க நான் முன்னெடுத்த தேசிய ரீதியான வேலைத்திட்டம் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், என்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் என்னை மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாக்கவும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து தலைமையேற்று கிராமங்களில் போதைப் பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன்” எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments