முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார மீட்சிக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைக்குமாறு உத்தியோகத்தர்களைக் கடுந்தொனியில் அறிவுறுத்தினார். இது தொடர்பில் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
'நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு ஜனாதிபதி மத்திய வங்கி மீதும் கொரோனா வைரஸ் பரவல் மீதும் குற்றஞ்சுமத்துகின்றார்.
ஆனால் உண்மையில் கடந்த 7 மாதங்களாக சீராக ஒழுங்கமைக்கப்படாத நிதிக்கொள்கை மற்றும் தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றின் விளைவே இந்த பொருளாதாரச் சீர்குலைவாகும்.
0 Comments