Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வாகன விபத்தில் பிரபல இயக்குனரின் புதல்வி பலி







கொழும்பு பாமன்கடை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாமன்கடை ஈஸ்வரி வீதிக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகன் ஆர் ரக காரில் பயணித்த பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த காரை ஓட்டிச் சென்ற பெண்ணின் கணவர் எனக் கூறப்படும் நபர் ஆபத்தான நிலைமையில் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரான சந்திரரத்ன மாப்பிட்டிகமவின் புதல்வியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மற்றைய காரை ஓட்டிச் சென்ற நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.




Post a Comment

0 Comments