Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மறைமுகமாக மகிந்தவை விமர்சித்த கோட்டாபய!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமர்சித்தது இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அல்ல எனவும் அவர் நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்சவையே விமர்த்தார் என கருத முடியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அனுரகுமார இதனை கூறியுள்ளார்.

சாதாரண சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதி எந்த நிறுவனத்தை அழைத்தாலும் அதற்கு பொறுப்பான அமைச்சரையும் அழைக்க வேண்டும்.

நிதி சட்டமூலத்தில் அதிகளவான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம். நிதியமைச்சருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிதியமைச்சரே சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதுடன் உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும்.

இதனைால், நிதியமைச்சரை அழைக்காது அதிகாரிகளை அழைத்து விமர்சிப்பது அந்தளவுக்கு நீதியானது செயல் அல்ல என நான் நினைக்கின்றேன். சில நேரம் இது நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட மறைமுகமான குற்றச்சாட்டாக நான் கருதுகிறேன்.

நிதியமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ள நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளை நிதியமைச்சருக்கு தெரிந்தோ தெரியாமலோ அழைத்து ஜனாதிபதி விமர்சித்தமையானது நிதியமைச்சரை விமர்சித்ததாகவே நான் கருதுகிறேன்.

ஜனாதிபதி இவ்வாறு சத்தமிடுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். சந்தைக்கு சென்று அரிசி விலை குறித்து சத்தமிட்டார். அரிசி மாஃபியாவை கட்டிப்போட போவதாக சத்தமிட்டார். அதன் பின்னர் மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து சத்தமிட்டுள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று சத்தமிட்டார். நாட்டை ஆட்சி செய்வது என்பது அதிகாரிகளை அழைத்து ஊடகங்களுக்கு முன்னால் விமர்சிப்பது அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments