எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமது தரப்பு வேட்பாளர்கள் எவருக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளோ அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளோ இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 48 வீதமானவர்கள் பட்டதாரிகளாவர்.
தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கடந்த 20 வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளையோ அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளையோ சந்திக்காதவர்கள்.
.தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் உள்ள தொழில்சங்க தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்றத்திற்கு சட்டங்களை உருவாக்க தெரிந்தவர்கள், நிதிகளை கையாளத்தெரிந்தவர்கள்,மக்களின் கரிசனைகளிற்கு தீர்வை காணத்தெரிந்தவர்கள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments