Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்பெயினில் பார்வையாளர்களின்றிய விசித்திரமான இசை நிகழ்ச்சி!



ஸ்பெயினில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களுக்கு பதிலாக தாவரங்கள் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையை கொண்டாடும் விதமாக இத்தாலிய இசையமைப்பாளர் கியாகோமோ புச்சினியின் தலைமையில், பார்சிலோனாவின் லைசு ஒபரா ஹவுஸில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு பதிலாக பார்வையாளர்களின் இருக்கைகளில் 2 ஆயிரத்து 292 செடிகள் வைக்கப்பட்டிருந்தன.

இருக்கையில் இடம்பெற்றிருந்த இந்தச் செடிகள் சுகாதார பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த லைசு ஒபரா,

ஒரு வேதனையான காலத்திற்கு பிறகு வித்தியாசமான பார்வையுடன் நாங்கள் எங்கள் பணிகளை தொடர இது வழிவகுத்துள்ளது.

தாவரங்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி இயற்கையுடனான எங்களது பிணைப்பை உணர்த்தும் விதமாக இருந்தது என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments