சிங்கள அரசுகள் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கடந்த நான்கரை வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கெடுபிடிகளை ராஜபக்ஸ அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களால் தடுத்து நிறுத்த முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்களின் நலன்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், எதிர்வரும் காலங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டினார்.
0 Comments