Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொரோனா சிகிச்சைக்கு இவ்வளவு கட்டணமா? பட்டியலைப் பார்த்து மயங்கி விழுந்த நோயாளி!



அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கு 62 நாட்கள் சிகிச்சை பெற்ற நபருக்கு 1.1 மில்லியன் டொலர் சிகிச்சைக்கான கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக பாதிப்புக் கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவரது மருத்துவமனைக் கட்டணம் தலைசுற்று வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மைக்கெல் ஃப்ளோர் எனும் நபருக்கு 181 பக்கங்கள் கொண்ட கட்டண பட்டியலை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது. இதனால் அவருக்கு மயக்கநிலை ஏற்பட்டுள்ளது.

அவருக்கு 3,000 இற்கும் மேற்பட்ட உபகரணங்களுக்கு 1.12 மில்லியன் டொலர் ( ரூ.8.14 கோடி) கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments