Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இதற்கு கருணாவே காரணம்! ஆணையின்றியே கைது செய்ய முடியும் மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை



தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுதல், விருப்பு தெரிவு இலக்கங்களுடன் பதாகைகளை வைத்தல் போன்ற குற்றங்களை செய்வோரை ஆணையின்றியே கைது செய்யமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஏற்கனவே ஈடுபட்டு வருவதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கொழும்பின் - மட்டக்குளி மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களில் பரீட்சாத்த தேர்தல் நடத்தப்பட்டது.

இது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகதார ஒழுங்கு விதிகளின் கீழ் எவ்வாறு வாக்களிப்பது என்ற தெளிவை வழங்குவதற்காகவே இந்த தேர்தல் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை கருணா வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Post a Comment

0 Comments