தென்கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை இரத்து செய்வதற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் கொரிய எல்லைப் பகுதியில் வடகொரியாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை தென்கொரியா விநியோகித்ததை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்தது.
இதனால் வடகொரியா இராணுவ துருப்புக்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்ற நிலையில் வட கொரியா அதிபரின் திடீர் திருப்பமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments